இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

நடிகர் விஷால் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்துக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல்

December 7, 2017 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2539 Views

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நடிகர் விஷால் தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள, தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி, தயாரிப்பாளர்கள் கிஷோர், வடிவேல் உள்ளிட்ட மூன்று பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அதில், தமிழ் தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குரிமை தொடர்பாக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இதனால், பல தயாரிப்பாளர்களின் வாக்குரிமை கேள்விக்குறியாகும் நிலை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதை விசாரித்த நீதிபதி கார்த்திக்கேயன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். ஆனால் அந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும், வழக்கின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்றும் அவர் உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )