இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

விஷால் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் கருத்து

December 7, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
9679 Views

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியின் முடிவே இறுதியானது என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விஷாலை முன்மொழிந்த அத்தொகுதியைச் சேர்ந்த 10 பேரில் இரண்டு பேர், கையெழுத்து தங்களுடையது அல்ல என தெரிவித்ததால் மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

இது குறித்து நடிகர் விஷால் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்திருந்தார். இந்த நிலையில், விஷாலின் புகாருக்கு பதில் அளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரியின் முடிவே இறுதியானது எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமது வேட்புமனுவை முன்மொழிந்த பிறகு பின்வாங்கிய இருவரை காணவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

பேருந்து கட்டண உயர்வு காலத்தின் கட்டாயம் என்று மத்திய

இன்னும் ஒரு வாரத்தில் பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கு

திருச்சியில் பிச்சைக்காரர்களை உழைப்பாளிகளாக மாற்றியதற்காக

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளதால்

தற்போதைய செய்திகள் Jan 21
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.75 (லி)
  • டீசல்
    ₹ 66.25 (லி)