முகப்பு > தமிழகம்

ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண், சிறுமியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சிறுவர்கள்!

June 06, 2017திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் வீட்டிற்குள் புகுந்து, ஆசைக்கு இணங்க மறுத்த பெண் மற்றும் சிறுமியை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட கும்பலை, போலீஸார் தேடி வருகின்றனர்.  

திருவள்ளூர் மாவட்டம் தோட்டக்காடு மேட்டுகாலனி கிராமத்தில் வசிப்பவர் சரண்ராஜ். அவரது மனைவி வர்ஷா, தனது உறவினர் ஒருவரின் மகளான 3 வயது சிறுமி ரித்திகாவுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வர்ஷாவின் வீட்டிற்குள் கஞ்சா போதையில் புகுந்த விஷ்ணு மற்றும் பிரவின் ஆகியோர், கத்தியைக் காட்டி மிரட்டி, அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். 

வர்ஷா கூச்சலிட்டதால் ஆத்திரத்தில் சிறுமி ரித்தகாவின் கழுத்தை அவர்கள் அறுத்துள்ளனர். அதைத் தடுக்க முயன்ற வர்ஷாவின் கையில் வெட்டிய அவர்கள் 2 பேரும், வெளியில் காத்திருந்த தினேஷ், பூவரசன் ஆகியோருடன் தப்பியோடி விட்டனர்.  

ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வர்ஷாவும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமி ரித்திகாவும் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர். 

சரண்ராஜ் குடும்பத்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பருக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், அவரின் தூண்டுதலால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும், சரண்ராஜ் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்