இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Popup

Breaking News

Jallikattu Game

​ஆசிரியர்களுக்கு இணையாக பாடம் நடத்திய 9-ம் வகுப்பு மாணவிகள்!

February 6, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1509 Views

திருவண்ணாமலை அருகே ஆசிரியர்களுக்கு இணையாக 9-ம் வகுப்பு மாணவிகள் நடத்திய பாடத்தை தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்வத்துடன் கவனித்தார்.

திருவண்ணாமலை பாத் குளோபல் பப்ளிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வைஷ்ணவி, பூஜா ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு சுற்றுச்சூழல் குறித்த கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில், தங்களை சந்திக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். 

இந்த கடிதத்தினை பார்த்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாணவிகளை சந்திக்க நேரம் ஒதுக்கினார். இதையடுத்து, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் வைஷ்ணவி, பூஜா ஆகிய இருவரும் மற்ற மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்தும், பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும், வகுப்பறையில் பாடம் நடத்தினார். 

அப்போது ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் ஆகிய இருவரும் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மாணவிகள் பாடம் நடத்துவதை உன்னிப்பாக கவனித்தனர். 

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, 9-ம் மாணவிகள் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் போது, கல்லூரி மாணவர்களும் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ – மாணவிகளுக்கு சமுதாய பணியாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏர்செல் நிறுவனத்தின்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிளாங்காட்டூர் கிராம மக்கள்

காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி

கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் கோவில் திருவிழாவில்

சிதம்பரம் அருகே முதலைகள் கடித்து விவசாயி பலியான சம்பவம்

தற்போதைய செய்திகள் Feb 22
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.37 (லி)
  • டீசல்
    ₹ 65.68 (லி)