சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் கைது..! | hassini murderer whos killed his own mother is arrested in mumbai | News7 Tamil

இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Breaking News

Jallikattu Game

சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் கைது..!

December 6, 2017 எழுதியவர் : velprasanth எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
14297 Views

தாயை கொன்று விட்டு தலைமறைவாக இருந்து வந்த தஷ்வந்தை, தனிப்படை போலீசார் மும்பையில் கைது செய்துள்ளனர். சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில், போலீசார் மெத்தன போக்கினால்தான் ஜாமினில் விடுவிக்க பட்ட தஷ்வ்ந் மீண்டும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடதக்கது.  

திருவள்ளூர் மாவட்டம் மவுலிவாக்கத்தைச் சேர்ந்த பாபு -ஸ்ரீதேவி தம்பதி, தங்களது இரண்டு குழந்தைகளுடன் மாதா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுடையை 6 வயது மகள் ஹாசினி, அதே குடியிருப்பில் வசித்து வந்த மென்பொறியாளர் தஷ்வந்த் என்பவரால், கடந்த பிப்ரவரி மாதம் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், தஷ்வந்த் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் தஷ்வந்த் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யமால் காலம் தாழ்த்திய போலீசாரின் மெத்தனபோக்கை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் சுட்டிகாட்டி  ரத்து செய்தனர். தொடர்ந்து தஷ்வந்தை ஜாமினிலும் விடுவித்தனர். 

இதற்கு ஹாசினியின் பெற்றோர், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில்,  மவுலிவாக்கத்திலிருந்து தங்களது வீட்டை குன்றத்தூர் பகுதிக்கு தஷ்வந்ததின் பெற்றோர் குடிமாறியுள்ளனர். போதை பழக்கத்திற்கு அடிமையான தஷ்வந்த், தாய் சரளாவிடம்  20ஆயிரம் ரூபாய் கேட்டதாகவும், அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமுற்று தாயையே  கொலை செய்து விட்டு, நகைகளுடன் தஷ்வந்த் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. 

இதுகுறித்து அவரது தந்தையே போலீசாரிடம் அளித்து புகாரின் பேரில், 3 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான தஷ்வந்தை கடந்த 5 நாட்களாக போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்த்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இனியாவது காவல்துறை முறையாக செயல்பட்டு கடும் தண்டனை பெற்று தரவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 15
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )