முகப்பு > தமிழகம்

காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் கைது!

April 05, 2017

காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் கைது!


சென்னையில் 50 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் தனியார் கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனத்தின் உரிமையாளரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் தனக்கு சொந்தமான பெருங்குடியில் உள்ள நிலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள காசா கிராண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடித்து விற்பனை செய்யப்பட்ட பிறகு ஒப்பந்தத்தில் உள்ளபடி தனக்கு தரவேண்டிய 50 கோடி ரூபாய் பணத்தை காசா கிராண்ட் நிறுவனம் தராமல் மோசடி செய்ததாக குணசேகரன் குற்றம் சாட்டினார். 

இது குறித்து மத்திய குற்றப் பிரிவு போலிசிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் குணசேகரன் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

இதையடுத்து உய்நீதிமன்ற உத்தரவு மூலம் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலிசார் காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அனிருத்தனை கைது செய்துள்ளனர்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்