​நெல்லுக்கும், கரும்புக்கும் பிரச்சனை என்றால் சும்மா விடமாட்டேன் - விஜயகாந்த் | Will not as if any prob arises for paddy and sugancane says vijayakant | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​நெல்லுக்கும், கரும்புக்கும் பிரச்சனை என்றால் சும்மா விடமாட்டேன் - விஜயகாந்த்

November 5, 2017 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4381 Views

நெல்லுக்கும், கரும்புக்கும் பிரச்சனை என்றால் சும்மா விடமாட்டேன் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார். 

ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி விஜயகாந்த் தலைமையில் தேமுதிக சார்பில் திருப்பூர் அருகிலுள்ள ஏரிபாளையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டுவண்டியில் வந்த விஜயகாந்த், பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார். 

விவசாய குடும்பத்தில் பிறந்ததால் தான் நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற போராடுவதாக தெரிவித்தார். நெல்லுக்கும், கரும்புக்கும் ஏதாவது பிரச்னை என்றால் சும்மாவிடமாட்டேன் என தெரிவித்த விஜயகாந்த், காமராஜர் காலத்தில் கொண்டுவந்த திட்டத்தை திமுகவும், அதிமுகவும் செயல்படுத்தாமல் ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார். 

ஆனைமலையாறு நல்லாறு திட்டம் குறித்த நல்ல அறிவிப்பு விரைவில் வரும் என தான் நம்புவதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )