இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​தேனி அருகே ஒரே பகுதியில் டெங்குவால் அடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு!

October 5, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1802 Views

தேனியில் டெங்கு காய்ச்சலால் ஒரே பகுதியில் ஒரு மாதத்தில் 3வது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானபட்டி, தெற்கு தெரு பகுதியில் கடந்த மாதம் சம்பத் குமார் என்ற 7வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் மரணமடைந்தார். 

இதனைத் தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ராகஸ்ரீ என்ற குழந்தையும் ஓரிரு நாளில் டெங்குவால் உயிரிழந்தது. 
இதனிடையே அதே பகுதியை சேர்ந்த கருப்பையா, பழனியம்மாள் தம்பதியினரின், அழகேஸ்வரி என்ற 12வயது சிறுமிக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து தேனி அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் அழகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ஒரே பகுதியில் டெங்கு காய்ச்சலால் இரண்டு சிறுமிகள், ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)