முகப்பு > தமிழகம்

​பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையை கத்தியால் குத்திய 9-ம் வகுப்பு மாணவன்!

October 05, 2017காஞ்சிபுரம் மாவட்டம் சோகன்டியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர், ஆசிரியையை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிட்டில் ஜாக்கி மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர், 3 மாதங்களுக்கு முன்னதாக பள்ளியிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இன்று பள்ளிக்கு வந்த அந்த மாணவர், அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த தமிழ் ஆசிரியை பூங்கொடியை, கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். 

இதில் ஆசிரியை பூங்கொடி படுகாயம் அடைந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே, தப்பிச்செல்ல முயன்ற மாணவரை அங்கிருந்தவர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

ஆசிரியையை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்