இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

​இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மாவட்ட மேலாளர்!

August 4, 2018 எழுதியவர் : elango எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1767 Views

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி சிவசாமி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார். 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சாரம் டாஸ்மாக் கடை பொதுமக்களின் 
எதிர்ப்பை அடுத்து மூடப்பட்டது. அக்கடையில் பணிபுரிந்த டாஸ்மாக் விற்பனையாளர் ராமமூர்த்தி, டாஸ்மாக் மாவட்ட மேலாளரை அணுகி பணி இடமாற்றம் செய்யக் கோரியுள்ளார். இதற்கு, ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவகாமி.

இதனை தொடர்ந்து, ராமமூர்த்தி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலிசில் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலிசாரின் அறிவுறுத்தலின்பேரில் இன்று காலை விழுப்புரம் வி.ஓ.ஏ நகரில் உள்ள வீட்டில் சிவகாமியிடம் ராமமூர்த்தி ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலிசார் சிவகாமியை கையும் களவுமாக கைதுசெய்து லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 கடந்த 7 மாதத்திற்கு முன் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக இருந்த 
முகுந்தன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார் என்பது 
குறிப்பிடத்தக்கது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )