இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

பயணிகள் போல் நடித்து கால்டாக்சியை கடத்திய கும்பல்; இருவர் கைது ஒருவர் தப்பியோட்டம்!

August 4, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6114 Views

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில் காரை கடத்திய மூன்று பேரில் இருவரை போலீசார் கைது செய்தனர். 

திருவள்ளூரைச் சேர்ந்த சிவராஜ் சென்னையில் பிரபல கால்டாக்சி நிறுவனத்தில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது காரில், பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொடுங்கையூருக்கு மூவர் பயணித்துள்ளனர். தொடர்ந்து கார் கொடுங்கையூர் சென்ற போது, கத்திமுனையில் ஓட்டுநர் சிவராஜை மிரட்டி கீழே தள்ளிவிட்டு காரை கடத்தி சென்றுள்ளனர்.

இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் அவ்வழியே வந்தவர்களுடன் துரத்தி சென்று, காரினை ஓட்டுனர் சிவராஜ் மடக்கி பிடித்துள்ளார். அப்போது ஒருவர் தப்பியோடியதையடுத்து, இருவரை மட்டும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

போலீசார் விசாரணையில், அவர்கள் திருவல்லிக்கேணியை சேர்ந்த விக்ரம், அண்ணாநகரைச் சேர்ந்த கார்த்திக் என தெரியவந்தது. இதில் விக்ரம் என்பவர், கொலை வழக்கில் தேடப்பட்டு வந்ததையும் உறுதி செய்து,  இருவரையும் போலீசார் கைது செய்தனர். கார் கடத்தலில் தப்பியோடிய கோபி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )