முகப்பு > தமிழகம்

வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும்: விஜயகாந்த்

January 30, 2017வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

வன்முறையால பாதிக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் பகுதிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மீனவர்களை விஜயகாந்த் சந்தித்தார். பின்னர் தீயில் நாசமான மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளை பார்வயிட்ட அவர், அங்குள்ள மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற நிவாரண உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், மக்களை பொத்தாம் பொதுவாக கைது செய்யக்கூடாது என கூறினார்.

மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு என்ன உதவி செய்தது எனவும் அவர் கேள்வி எழுப்பினார். சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் வலியுறுத்தினார்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்