இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Jallikattu Game

​515 புதிய பேருந்துகளின் சேவை தொடக்கம்: புதிய பேருந்துகளில் உள்ள வசதிகள் என்ன?

July 3, 2018 Posted By : arun Authors
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
20709 Views

படுக்கை வசதிகளுடன் கூடிய 14 சொகுசுப் பேருந்துகள் உள்பட 515 புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு புதியதாக வாங்கப்பட்டுள்ள 515 பேருந்துகளின் சேவையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த பேருந்துகள் சென்னையிலிருந்து சேலம், விழுப்புரம், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. புதிய விரைவுப் பேருந்துகள், வழக்கமான பச்சை நிறத்திற்கு பதிலாக, வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன சொகுசு பேருந்தில் இடம் பெற்றுள்ள வசதிகளை தற்போது பார்ப்போம்.

தாழ்வான படிக்கட்டுகள், தானியங்கி கதவுகள் மற்றும், அனைத்து படுக்கைகளிலும் குளிர்சாதன வசதிகள் இடம்பெற்றுள்ளன. 

உடமைகளை வைத்துக்கொள்ள பொருட்கள் வைப்பறையுடன் அனைத்து இருக்கைகளிலும் செல்போன் சார்ஜர் போடும் பிளக் பாயிண்டுகள். 

மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு படுக்கைகளுடன், அனைத்து இருக்கைகளிலும் சீட் பெல்ட் வசதி பொருத்தப்பட்டுள்ளது.

அவசர காலங்களில், பேருந்திலிருந்து உடனடியாக வெளியேறும் வசதியுடன், அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சேவை கருதி கழிப்பிட வசதி 

ஓட்டுநர்கள் தூங்கினால் சென்சார் மூலம் ஒலி எழுப்பும் வசதி 

இரவு நேரங்களில் பயணிகள் பாதுகாப்பாக ஏறுவதற்காக படிக்கட்டுகளில் விளக்குகள் உள்பட சொகுசு பேருந்தில் அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )