இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Popup

Breaking News

Jallikattu Game

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் தீண்டாமையின் பிடியில் தமிழக கிராமம்!

August 29, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
10284 Views

நாடு சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளை கடந்தாலும், இன்னும் தீண்டாமை கிராமங்களும், சாதிய அடக்குமுறைகளும் நம்மை விட்டு அகலவில்லை. இதற்கு சான்றாக இருக்கிறது சேலம் மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டி கிராமம். கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புகளில் சம அந்தஸ்து பெற்றாலும் இன்னும் சமூக அந்தஸ்து பெறமுடியாமல் தீண்டாமை கொடுமையில் சிக்கி தவிக்கின்றனர் தாழ்த்தப்பட்ட மக்கள். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முதல்நிலைப் பேரூராட்சி கிராமமான கீரிப்பட்டியில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 15 வார்டுகள் கொண்ட கிராமத்தில் பெரும்பான்மையின சமூகத்தை சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். இதில் இரண்டு வார்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேல் தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கீரிப்பட்டி கிராமத்தில் தான் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்ற தகவல் வர ரகசிய கேமராவுடன் நேரடியாக கிராமத்திற்குள் சென்று களம் இறங்கியது நமது நியூஸ்7தமிழ் குழு. கடைவீதி பகுதியில் முடிதிருத்தும் நிலையங்களுக்கு சென்ற தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களை வேண்டா வெறுப்பாக விரட்டியடிக்கப்பட்ட சம்பவங்களையும் பார்க்க முடிந்தது. 

ஓரிரு கடைகளில் இன்று போய் நாளை வா. அல்லது மாலை வா என தட்டி கழிக்கும் வசனங்கள் மட்டுமே இருந்தது. இந்த காட்சிகளும் ரகசியமாக படம்பிடிக்கப்பட்டன

இவை அனைத்தையும் காட்சிபடுத்திய போதே தகவல் பரவியதால் மீதமிருந்த 5-6 சலூன் கடைகளிலும் பூட்டுகள் தொங்கின. MBA.., BE என பட்ட படிப்புகளை படித்துள்ள இந்த கிராம தலித் இளைஞர்கள்,  நல்ல வேலைக்கு சென்றாலும் சொந்த ஊரில் உள்ள கடைகளில் முடி திருத்தம் செய்ய முடியாது. 15 கிமீ தொலைவில் உள்ள தம்மம்பட்டி அல்லது 20 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூருக்கோ சென்று தான் முடிதிருத்தம் செய்ய முடியும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி திருத்தினால் அந்த ஊரில் கடை வைத்திருக்க உயர்வகுப்பினர் அனுமதிப்பதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

வெளியூர் சென்று முடி திருத்த முடியாத பலர் தாடியுடனும், தலையில் ஜடா முடியுடனும் இருக்கின்றனர். தங்களுக்குள்ளாகவே மாறி மாறி முடி வெட்டி கொள்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்லும் இளைஞர்களும் விடுமுறை நாட்களில் தங்கள் வீடுகளுக்கு முன்பு சிகை திருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
 
80 வயதான இந்த பெரியவர் ஒரு முறை கூட தன் வாழ்நாளில் சொந்த ஊரில் முடி வெட்டியதில்லை என ஆதங்கத்துடன் கூறுகிறார். 

ஊரின் மையத்தில் இருக்கும் திரவுபதி அம்மன் கோயிலுக்குள் இன்றும் தலித் சமூகத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்து அம்மனை தரிசிக்கவோ, திருநீறு பிரசாதம் பெறவோ முடியாது.
 
இரட்டை குவளை முறை, கோவில்களில் வழிபாடு செய்ய தடை உயர்வகுப்பினருக்கு முடி வெட்டப்படும் கடைகளில் தாழ்த்தப்பட்டவர்க்கு தடை போன்ற தீண்டாமை செயல்கள் குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் தீர்வு எட்டப்படவில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். 

சேலம் கீரிப்பட்டி கிராமத்தில் முடிவெட்டும் கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடிவெட்ட மறுப்பது குறித்தும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் பிரத்யேக செய்தி  ஒளிப்பரப்பானது.இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி அதிகாரிகளுக்கு விசராணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார். ஆட்சியரின் உத்தரவையடுத்து, ஆத்தூர் ஆதிராவிடர் நல தனி வட்டாட்சியர் மணி தலைமையில் அதிகாரிகள் கீரிப்பட்டி கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்து ஆய்வு நடத்தினர். கிராமத்தில் பல ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்ந்து வருவதாகவும், முடி திருத்தம் செய்யும் கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களை முடி வெட்டாமல் புறக்கணித்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து, கிராம மக்களிடம் விசராணை நடத்திய அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் உள்ள அம்மன்

பெரியார் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், விஷ்வ ஹிந்து

5 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு

போச்சம்பள்ளி அருகே தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள்

இந்து அமைப்பு நிர்வாகிகள் கொலை வழக்கில் சிறையிலுள்ள பன்னா

தற்போதைய செய்திகள் Mar 20
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)