முகப்பு > தமிழகம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

February 28, 2017கலிங்கப்பட்டியில் மதுபான கடையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபடும்போது தன்னை சுட்டுக்கொல்ல போலீசார் திட்டமிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனவும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் எனவும் தெரிவித்தார். எனது தாயார் தள்ளாத வயதிலும் கலிங்கபட்டியில் டாஸ் கடையை 
அடைக்க போராடினார் எனவும் அப்போது காவல்துறை என்னை சுட்டுக்கொல்ல முயற்சித்ததாகவும் வைகோ பரபரப்பு குற்றஞ்சாட்டினார்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்