முகப்பு > தமிழகம்

செங்கம் அருகே இடி, மின்னல் தாக்கியதில் 6 பெண்கள் உயிரிழப்பு!

May 27, 2017செங்கம் அருகே இடி, மின்னல் தாக்கியதில் அரிசி ஆலை இடிந்து விழுந்ததில் 6 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தளவநாயக்கன்பேட்டையில் நேற்று மாலை கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள அரிசி ஆலை ஒன்றின் மீது இடி தாக்கியது. இதில் அந்த கட்டடம் இடிந்து விழுந்தது. 

அப்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 5 பெண்கள், இடிபாடுகளில் சிக்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த களத்தூர் கிராமத்தில் இடி தாக்கி 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். களத்தூர் கிராம மைதானத்தில் நேற்று மாலை இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். 

திடீரென மழை பெய்ததால் மரத்தின் அடியில் அனைவரும் தஞ்சம் அடைந்தனர். அப்போது இடி தாக்கியதில் மணி, திருஞானவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்