முகப்பு > தமிழகம்

சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் சேஷசாயி புதிய தகவல்

January 27, 2017குடியரசு தினக் கொண்டாட்டத்தை சீர்குலைக்கவே சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டதாக சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் சேஷசாயி தெரிவித்துள்ளார்.

சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் சேஷசாயி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 23ம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சென்னையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து பேசினார். மாணவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவே காவலர்கள் குவிக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்களுக்கு போதிய அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் 

வன்முறையில் ஈடுபடவில்லை என்று தெரிவித்த அவர், குடியரசு தினத்தை சீர்குலைக்க சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறினார். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

ஒரு சில காவலர்கள் தவறான செயல்களில் ஈடுபட்டதை வைத்து மொத்த காவல்துறையையும் மதிப்பிடக்கூடாது என்றும் தெரிவித்தார். 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்