இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Jallikattu Game

தூத்துக்குடி போராட்டம் சில சமூக விரோதிகளால் திசை திருப்பப்பட்டது - முதல்வர் விளக்கம்!

May 24, 2018 Posted By : arun Authors
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5962 Views

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்படவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது முதலமைச்சரை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக ஸ்டாலின் தவறான தகவலை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். பத்திரிகைகளில் செய்தி வருவதற்காக தவறான தகவலை வெளியிட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மின் இணைப்பை 2013-ம் ஆண்டே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா துண்டித்ததாக கூறினார்.

நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அரசு சார்பில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சட்டப்பூர்வமாக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி கலவரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், அமைதியாக நடைபெற்ற போராட்டம் சில சமூக விரோதிகளால் திசை திருப்பப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். 

இறுதியாக துப்பாக்கிச்சூடு குறித்து  விளக்கம் அளித்த முதலமைச்சர், துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்றும், தடுப்பு நடவடிக்கையாகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )