இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

​8 கிலோ மீட்டர் தூரம் சடலத்துடன் ஆற்றைக் கடக்கும் கிராம மக்கள்!

February 23, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1444 Views

நாகை தாலுகாவில் இருக்கும் வடக்குப் பொய்கை நல்லூர் கிராம மக்கள் 50 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு நிலம் ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இன்று வரை அவர்களின் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்று வடக்குப் பொய்கை நல்லூர் மக்கள் வேதனையுடன் சொல்கின்றனர். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

நாகை தாலுகா வடக்குப் பொய்கை நல்லூர் கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இந்த ஊரில், தலித் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட சுடுகாட்டிற்கு சரியான பாதை வசதி இல்லை. அந்த வழியாகப் பாயும் கல்லாற்றைக் கடந்து, சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சென்றால் தான் அவர்களால் சுடுகாட்டை அடைய முடியும். மழை காலங்களில் கரைபுரண்டோடும் அந்த ஆற்றில், வெயில் காலங்களில் கடல் நீர் புகுந்து விடும் என்பதால், ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் ஆற்றில் நீர் நிரம்பியே இருக்கும் என்று கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

இந்த சுடுகாட்டை சுற்றிலும், கருவேல மரங்கள் சூழ்ந்திருப்பதால், இறுதிச்சடங்கு செய்பவர்கள் பலரும் முட்கள் கீறி ரத்த காயத்துடன் திரும்பி செல்லும் நிலையே உள்ளது. மேலும், கடல் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், சுடுகாட்டில் உடல்கள் புதைக்கப்பட்ட இடமும் மூழ்கி விடும் எனக் கூறுகின்றனர். எனவே தலித் மக்களுக்கான சுடுகாட்டிற்கு தனியாக இடம் ஒதுக்கித் தரக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தங்களது நீண்ட நாள் கோரிக்கையான சுடுகாட்டு பாதை அமைக்க நடவடிக்கை இல்லாவிட்டால் தங்களது குடும்ப அட்டை முதல் ஆதார் அட்டை வரை அரசிடம் ஒப்படைத்து ஊரை காலி செய்து செல்லும் நிலை ஏற்படும் என பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம்

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த தாம்பரத்தை சேர்ந்த அனுவித்யாவின்

அழிந்து வரும் சிட்டு குருவிகளை காப்பாற்றும் வகையில் செயற்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக

வனப்பகுதியில் புகைப்பிடித்தல்,  சமையல் செய்தால்

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)