இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

​மர்மமானமுறையில் கொலை செய்யப்பட்ட விவசாயி!

November 22, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
910 Views

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் விவசாயி உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  

தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம் அருகே பூம்பள்ளம் என்னுமிடத்தில் விவசாய நிலத்தில் சடையன் என்பவர் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். சடையன் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். திருமணம் ஆகாத இவர் தனது அண்ணன் மாதையன் வீட்டில் குடியிருந்து வந்தார். வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் இலைதழைகள் அறுப்பதில் இவருக்கும் வேறு சிலருக்கும் தகாரறு இருந்து வந்துள்ளது.     

இந்நிலையில் முன்பகை காரணமாக இவர் நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்துப் பெண்ணாகரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சிவகங்கை அருகே, குடும்ப பாரத்தை சுமக்கும் 14 வயது சிறுமி

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்த

திருச்சுழி அருகே கிருதுமால் நதியில் கட்டப்பட்ட புதிய

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை,

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.42 (லி)