இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​குடிநீர் கேட்டு மனு கொடுத்தவரை மைக்கில், ஒருமையில் திட்டிய எம்எல்ஏ!

October 20, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3475 Views

குடிநீர் கேட்டு மனு கொடுத்தவரை சட்டமன்ற உறுப்பினர் மைக்கில் ஒருமையில் திட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி பங்கேற்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். 

அப்பொழுது கிராமத்தில் குடிநீர் விநியோகம் சரிவர செய்வது இல்லை எனக் கூறி குடிநீர் கேட்டு கிராம மக்கள் மனு கொடுத்தனர். 

அதனைப் பிரித்து படித்த சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, மைக்கில் பேசுகிறோம் என்பதை அறியாமல் மைக்கிலேயே மனு கொடுத்தவரை ஒருமையில் திட்டித் தீர்த்தார். இது அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)