இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கப்போவதாக ஜூயர் எச்சரிக்கை!

January 20, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2635 Views

ஆண்டாள் சன்னதியில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கக் கோரி, மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் எச்சரித்துள்ளார்.  

ஆண்டாள் குறித்து தவறாக பேசியதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடையில் வைரமுத்துவை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பாரதிய ஜனதா கட்சி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஸ்ரீவில்லிப்புதூர் ஆண்டாள் கோயில் ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜரும் பங்கேற்றார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிப்ரவரி மூன்றாம் தேதிக்குள் ஆண்டாள் கோவிலில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால், மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கவுள்ளதாகவும் ராமானுஜர் எச்சரித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )