இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

​போலீசார் விரட்டியடித்த பின்பும் நடந்த ஆட்டுக்கிடா சண்டை!

February 2, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1468 Views

தேனி மாவட்டம் கம்பம் அருகே போலீசார் விரட்டியடித்த பின்பும் ஆட்டுக்கிடா சண்டை நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேவல் சண்டையைப் போன்று ஆட்டுக்கிடா சண்டையும் அதிகளவில் நடத்தப்படுகிறது. 

ஆட்டுக்கிடா சண்டைக்கு உள்ள தடையால் போலீசார் அனுமதி மறுத்துவரும் நிலையில், தென் மாவட்டங்களில் இது தொடர்பாக அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
இந்நிலையில், கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஆட்டுக்கிடா சண்டையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆடுகளுடன் கலந்துகொண்டனர். 

ஆட்டுக்கிடா சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீசார் அனைவரையும் விரட்டியடித்தனர். ஆனால் அங்கிருந்து சென்றவர்கள் வேறு பகுதிகளில் கிடா சண்டை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )