இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​தஞ்சை பெரிய கோவில் தெரியும்... ‘புதுச்சேரியின் பெரிய கோவில்’ பற்றி அறிவீர்களா?

August 19, 2018 Posted By : arun Authors
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3962 Views

புதுவைக்கு தென்மேற்கில் 10 கிலோ மீட்டர் தொலைவில் வில்லியனூர் என்னுமிடத்தில் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

11ஆம் நூற்றாண்டில் தர்மபால சோழன் இந்த கோவிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை பெரிய கோவில் என்று அழைப்பது போன்று, ‘புதுச்சேரியின் பெரிய கோவில்’ என இதனை மக்கள் இன்றும் அழைக்கின்றனர். பல நூறு ஆண்டுகளை கடந்தும், கம்பீரமாக காட்சியளிக்கிறது இக்கோவில்.

தென்பகுதியில் அமைந்துள்ள இராஜகோபுரம் 97 அடி உயரம் மற்றும் 9 நிலைகளுடன் கட்டப்பட்டுள்ளது. சோழர்களின் சிற்ப கலைநுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. கோவிலுள்ள சிற்பங்கள், உள்நாட்டினரையும், வெளிநாட்டினரையும் மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

கோவிலுள்ள 2 பிரகாரங்களிலும் விநாயகர், முருகன், பைரவர், நவக்கிரகங்கள், முத்துக்குமாரசாமி, துர்க்கை, தட்சணாமூர்த்தி. வலம்புரி விநாயகர், ஆயிரம் லிங்கங்களை உடைய சிவன், ஈசான லிங்கம், பர்ண லிங்கம், நாயன்மார்கள், சோமாஸ் கந்தர், நடராஜர், அறுபத்து மூன்று நாயன்மார்கள் உள்ளிட்ட 
பல தெய்வங்களின் சிலைகளும் உள்ளன.

திருக்காமேஸ்வரர் கோவிலின் உள்ளே இருக்கும் முருகனின் சன்னதியில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது. ராஜா தேசிங்கு, செஞ்சியில் இருந்து இந்த சுரங்கபாதை வழியாக சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.  

கோகிலாம்பிகை அம்மனுக்கு எதிரே பிரசவ நந்தி உள்ளது. கர்ப்பிணி பெண்கள் கோகிலாம்பிகை அம்மனுக்கு அர்ச்சனை செய்து, இந்த நந்தியை தென்புறமாக திருப்பி வைத்து வழிபாட்டால், சுகப்பிரசவம் நடக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 
  
பங்குனி மாதம் 9, 10, 11 ஆகிய மூன்று தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் கோவிலின் 2 பிரகாரங்களை கடந்து மூலவராக வீற்றிருக்கும் சுயம்பு லிங்கத்தின் மீது காலை நேரத்தில் விழுகிறது. இந்த அதிசயத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கோவில் திருவிழா வெகு விமர்சையாக 13 நாட்கள் நடைபெறுகிறது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )