முகப்பு > தமிழகம்

கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த பரிதாபம்!

May 19, 2017

கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த பரிதாபம்!


சென்னை கிண்டியில் கட்டுமான பணியின்போது கற்கள் சரிந்து விழுந்ததில் பிற மாநிலத் தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிண்டி அருகே சின்னமலையில் 8 மாடிக் கட்டிடம் ஒன்றின் கட்டுமானப் பணிகளில், வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், ஆந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பணியாற்றிவந்தனர். இந்நிலையில், ஆறாவது மாடியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹாலோ பிளாக் கற்கள் திடீரென சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

கீழ்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒடிசாவைச் சேர்ந்த பிருந்தாவன் குர்த்தர், ஆந்திராவைச் சேர்ந்த சதாசிவம் ஆகியோர் மீது கற்கள் விழுந்து சம்பவ இடத்திலேயே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆந்திராவைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்