முகப்பு > தமிழகம்

ரஜினி பாராட்டு..ஸ்டாலின் மகிழ்ச்சி

May 19, 2017

ரஜினி பாராட்டு..ஸ்டாலின் மகிழ்ச்சி


ரஜினி பாராட்டி கூறியதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று 5வது நாளாக தனது ரசிகர்களைச் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அவருடன்  இன்று ஆர்வமாக ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். இதனிடையே, தமிழக அரசியல் தலைவர்கள் சிலரை, ரஜினி அவர்களின் திறனை கூறி பாராட்டினார் அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், பாமக இளைஞரணி தலைவர் அன்பு மணி ராமதாஸ் 

நவீன சிந்தனைகள் கொண்டவர் என்று பாராட்டுத் தெரிவித்தார். சீமானின் கருத்துக்களைக் கேட்டு தான்  வியந்ததாகக் கூறிய ரஜினிகாந்த், விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மீது தான் வைத்திருக்கும் நன்மதிப்பையும் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களின் ரஜினியின் பாராட்டு பற்றிய கேள்விக்கு, "அவருடைய பாணியிலே, மொழியிலே நான் சொல்ல வேண்டுமென்று சொன்னால், மகிழ்ச்சி" என ஸ்டாலின் ருசிகர பதில் அளித்தார்.

வீடியோ
 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்