முகப்பு > தமிழகம்

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் காத்திருப்பு போராட்டம்!

May 19, 2017

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் காத்திருப்பு போராட்டம்!


திருவிடைமருதூர் கதிராமங்கலத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அய்யனார் கோயிலில் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர். 

திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. 

இந்த கிணற்றிலிருந்து எரிவாயு எடுக்கப்பட்டு குழாய் மூலம் குத்தாலம் எரிவாயு மையத்திற்கு அனுப்பபட்டு வருகிறது. இந்நிலையில், கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திலுள்ள பைப்புகள் பழுதடைந்துவிட்டதாகவும் அதனை புதுப்பிப்பதற்கு புதிய குழாய்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலம் அய்யனார் கோயிலில் 500க்கும் மேற்பட்டோர் குவிநதனர். எண்ணெய் எரிவாயு எடுக்கும் இடத்திலிருந்து புதிதாக வைக்கப்பட்டுள்ள தளவாட பொருட்களை வெளியேற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்