முகப்பு > தமிழகம்

லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்படட் கோர விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

May 19, 2017

லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்படட் கோர விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!


கரூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி தீ பிடித்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியிலுள்ள கோவை தேசிய நெடுஞ்சாலையில் நல்லிபாளையம் என்ற இடத்தில் காரும்-லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் இரு வாகனங்களும் தீ பிடித்து எரிந்துள்ளது. 

விபத்தில் சிக்கிய காரில் பயணித்த  5 பேரில் மூவரை  அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.  இருப்பினும் இந்த கோர தீ விபத்தில் காரில் பயணம் செய்த இருவரும், லாரி ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

காரிலிருந்து மீட்கப்பட்ட மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, ரமேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். மீதமுள்ள இருவரையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விபத்து நேரிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்தின் காரணமாக நேரிட்ட போக்குவரத்து பாதிப்பை பரமத்தி மற்றும் தெக்கலை போலீசார் சீர் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்