முகப்பு > தமிழகம்

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கார்த்தி சிதம்பரம் லண்டன் பயணம்!

May 19, 2017

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கார்த்தி சிதம்பரம் லண்டன் பயணம்!


லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் கார்த்தி சிதம்பரம் லண்டனுக்குச் சென்றுள்ளார்.  

பீட்டர் முகர்ஜியா, இந்திராணி ஆகியோருக்குச் சொந்தமான ஊடக நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டு விதிமுறைகளை மீறியதற்காக வரிஏய்ப்பு குற்றச்சாட்டு இருந்தது. 

இந்த நிறுவனங்களுக்கு எதிரான வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டு விசாரணையைக் கைவிடச் செய்வதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி லஞ்சம் பெற்றதாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது. 

இது தொடர்பாகக் கடந்த சில நாட்களுக்கு முன் கார்த்தியின் வீடு மற்றும் 4 நகரங்களில் உள்ள அவரது அலுவலகங்களில் சிபிஐ அதிரடி ஆய்வு நடத்தியது. ஆய்வு நடைபெற்று இரண்டே நாட்கள் ஆகியுள்ள நிலையில் கார்த்தி நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.  

கார்த்தியின் லண்டன் பயணம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டது என்றும், அவர் வெளிநாடு செல்ல எந்தத் தடையும் இல்லை என்றும், விரைவில் அவர் நாடு திரும்புவார் என்றும் அவரது தந்தை சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்