முகப்பு > தமிழகம்

ஐந்தாவது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

May 19, 2017

ஐந்தாவது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!


மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளை மாற்றான் தாய் போல பார்ப்பதாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி தீர்ப்பாயத்தை கலைக்கக் கூடாது எனக் கோரி காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் 7 நாள் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றுவருகிறது. ஐந்தாவது நாளாக இன்று நடைபெற்ற போராட்டத்தில், தஞ்சை அருகே சோழன் விரைவு ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திடீரென விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்ததால் போலீசார் சிவப்புக்கொடியை காட்டி ரயிலை நிறுத்தினர். போராட்டத்தில் கலந்துகொண்ட கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். 

இதனிடையே, மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி பாசனத்திற்கு திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலிபானைகளை உடைத்தும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்