முகப்பு > தமிழகம்

உயரழுத்த மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த பரிதாபம்!

May 19, 2017

உயரழுத்த மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த பரிதாபம்!


மேட்டுப்பாளையம் அருகே விதிகளுக்கு புறம்பாக அமைக்கபட்டிருந்த உயரழுத்த மின்வேலியில் சிக்கி, காட்டு யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகதிற்குட்பட்ட சிட்டேபாளையம் என்னும் பகுதியில்  மாணிக்கம் என்பவரது தோட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டு இருந்த உயர் மின்அழுத்த வேலியில் சிக்கிய ஆண்யானை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

தகவலறிந்த மாவட்ட வனத்துறை அலுவலர் சிவசுப்பிரமணியம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி கிணற்று மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை நேரிடையாக மின்வேலியில் செலுத்தியுள்ளதை கண்டறிந்த வனத்துறையினர், தோட்ட உரிமையாளர் மாணிக்கம் மீது வன சட்டப்படி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ள யானைக்கு பன்னிரண்டு வயது இருக்கும் என தெரிவித்த சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகர், சட்டவிரோதமாக மின்வேலி அமைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்