இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

Breaking News

துணைவேந்தர் இல்லாமலேயே நடந்து முடிந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!

May 19, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
902 Views

உலகளவில் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று, துணைவேந்தர் இல்லாமலேயே நடந்து முடிந்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின்  37-வது பட்டமளிப்பு விழா அங்குள்ள விவேகானந்தா அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில், தமிழக பொறுப்பு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான வித்யாசாகர் ராவ் தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 

பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், உலகளவில் தலைச்சிறந்த 150 பல்கலைக்கழகங்களில் 4 தமிழகத்தில் தான் இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த மேலும் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக சான்றிதழில் துணைவேந்தரின் கையெழுத்து இல்லாத நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற எந்த பாதிப்பும் இருக்காது என்று பல்கலைக்கழகம் தெரிவித்திருப்பதாக மாணவர்கள் கூறினர். மேலும் பட்டமளிப்பு விழா நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், அவசரமாக சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வர நேர்ந்ததாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்


பாலிவுட் திரையுலகின் முன்ன்ணி நடிகையாக அசைக்கமுடியாத


பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 'பாகுபலி', 'பாகுபலி


பருத்தி வீரன்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான

தற்போதைய செய்திகள் Nov 22
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.01 (லி)
  • டீசல்
    ₹ 61.4 (லி)