இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

​துப்புரவுப் பணியாளர்கள் சாலையோரத்தில் சடலமாக கண்டெடுப்பு!

February 19, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2588 Views

மதுரை அருகே பெண் துப்புரவு பணியாளர்கள் இரண்டு பேர், சாலையோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை அழகர் கோயிலில் நாயக்கன்பட்டியை சேர்ந்த அழகுப்பொண்ணு, பொய்கை கரைப்பட்டியை சேர்ந்த பெரியா இருவரும் துப்புரவுப் பணியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். உறவினர்களான இவர்கள் இருவரும் நேற்றிரவு, அழகர் கோயிலில் இருந்து, அருகேயுள்ள மருத்துவமனைக்கு சென்றனர். 

இந்த நிலையில், இன்று காலை இருவரும் சாலையோரத்தில் சடலமாக கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர், இரண்டு பேரின் சடலத்தையும் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அவர்களது உடலில் காயங்கள் இருப்பதால், இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 

அதேநேரத்தில் இது வாகன விபத்தாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இதேபகுதியில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்ற தொடர் சம்பவங்கள் காரணமாக, அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம்

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த தாம்பரத்தை சேர்ந்த அனுவித்யாவின்

அழிந்து வரும் சிட்டு குருவிகளை காப்பாற்றும் வகையில் செயற்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக

வனப்பகுதியில் புகைப்பிடித்தல்,  சமையல் செய்தால்

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)