முகப்பு > தமிழகம்

பெண்ணை கேலி செய்தவர் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டு கொடூர கொலை!

May 18, 2017

 பெண்ணை கேலி செய்தவர் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டு கொடூர கொலை!


தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணை கேலி செய்த வழக்கில் தொடர்புடைய நபரின் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  மட்டக்கடை காளியப்பதெருவைச் சேர்ந்தவர் சச்சின். 25 வயது இளைஞரான இவரை  மாலை 6.30 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் தூத்துக்குடி 2ம் கேட் பகுதியில் வைத்து அடித்துக் கொண்டிருப்பதாக வடபாகம் போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து அவரை தேடி சென்ற காவல்துறையினர்  சிப்காட் காவல் நிலைய பகுதியில் சச்சினை பிணமாக கண்டெடுத்தனர். மேலும் அவரது ஆண் உறுப்பு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. 

சச்சின் இறப்பதற்கு முந்தைய தினம் பெண் ஒருவரை கேலி செய்த வழக்கு தொடர்பாக அவரை காவல்துறையினர் விசாரித்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சச்சினை அடிக்க பயன்படுத்திய கம்பு, அட்டை டயர் போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்