இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

புதுமையான நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சிசிக்கை அளிக்க முடியாமல் தடுமாறும் பெற்றோர்கள்!

April 18, 2018 Posted By : arun Authors
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5118 Views

மேலூர் அருகே புதுமையான நோயால் உடல் மெலிந்து அவதிப்பட்டு வரும் 21 வயதான இளைஞருக்கு சிகிச்சையளிக்க பணமின்றி, அவரது பெற்றோர்  தடுமாறி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருச்சுனையை சேர்ந்தவர் சித்ரா. இவர், திருச்சி மாவட்டம் புத்துநத்தம் பகுதியில் கணவர் பாலகிருஷ்ணனுடன் வசித்து வருகிறார். 

இவர்களது ஒரே மகன் மணிவண்ணன் கடந்த  5 வருடங்களாக குடல் சம்பந்தமான நோயால் அவதிப்பட்டு வருகின்றார். 

தினந்தோறும் சுமார் 8 முதல் 10 வேளை வயிற்றுபோக்கு ஏற்படுவதாகவும், உண்ட உணவு உடனடியாக செரிமானம் ஆவதால், உடல் மெலிந்து காணப்படுகிறார் மணிவண்னன். 

சிகிச்சைக்காக 1 ஏக்கர் நிலத்தை விற்று லட்சக்கணக்கில் செலவழித்து சிகிச்சை அளித்தும் குணமாகாதது வருத்தமளிப்பதாக தாய் சித்ரா 
வேதனை தெரிவிக்கின்றார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )