இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை!

February 18, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1938 Views

அதிமுக ஆட்சி கலைந்து விடும் என எண்ணியவர்களின் கனவு, கானல் நீர் ஆகி விட்டது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று முதல்வர் பழனிசாமி மணமக்களை வாழ்த்தினார். பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சி  கலைந்து விடும் என எண்ணியவர்களின் கனவு, அனைத்தும் கானல் நீராகி விட்டது என்றார்.

ஓராண்டில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சி தொடர்ந்து நிலைத்து நிற்கும் எனவும் குறிப்பிட்டார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஏமாற்றம் அளித்தாலும், அதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் வரவேற்கதக்கது என்றும், காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சேலத்தில் தனியார் மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். பின்னர், சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் 116 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளன்று தொடங்கப்பட உள்ளதாகவும், இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், காவிரி பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, 15 ஆண்டுகளுக்கு செல்லும் என்றும், மேல்முறையீடுக்கு செல்லமுடியாது எனவும் கூறப்பட்டுள்ளதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் அவர் கூறினார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 23
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )