முகப்பு > தமிழகம்

ரஸ்னா அருந்திய பள்ளி மாணவர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு!

July 17, 2017

ரஸ்னா அருந்திய பள்ளி மாணவர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு!


கள்ளக்குறிச்சி அருகே ரஸ்னா பானம் அருந்திய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 33 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக அவதிப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கள்ளக்குறிச்சி அருகே புது உச்சிமேடு பகுதியில் நடுநிலை பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளிக்கு அருகே கடை வைத்துள்ள பெண் ஒருவர், மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ரஸ்னா குளிர்பானம் வழங்கியதாக கூறப்படுகிறது. 

இதனை அருந்திய மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், கூத்தக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்