முகப்பு > தமிழகம்

தமிழக சட்டப் பேரவையில் குடியரசு தலைவர் தேர்தல் நிறைவு!

July 17, 2017

தமிழக சட்டப் பேரவையில் குடியரசு தலைவர் தேர்தல் நிறைவு!


இந்தியாவின் 14வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாஜக கூட்டணி சார்பில் பீகார் முன்னாள் ஆளுநரான ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தரப்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். 

அறிவித்தபடி சரியாக காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கை முதல்வாக்காக செலுத்தினார். பின்னர் ஓபிஎஸ் அணியினரும், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரும் வாக்களித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் அவர் வாக்களிக்க வர வாய்ப்பில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தின் 234 தொகுதிகளில் ஆர்.கே நகர் தொகுதி காலியாக இருப்பதாலும், திமுக தலைவர் மு.கருணாநிதி வாக்களிக்க வராததாலும் இருவர் தவிர மற்ற 232 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கேரளா எம்எல்ஏ அப்துல்லா ஆகிய இருவர் உள்பட மொத்தம் 234 பேர் வாக்களித்தனர். வாக்களிக்கத் தகுதியுள்ள அனைவரும் வாக்களித்த நிலையில் வாக்குப்பதிவு முடிவுக்கு வந்தது.

காலை 10 மணிமுதல் 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு மணிநேரத்திற்குள்ளாக முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்