முகப்பு > தமிழகம்

மகன்களை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்!

July 17, 2017

மகன்களை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்!


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கடன் பிரச்னையால் மகன்களை கொன்று தாயும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குள்ளஞ்சாவடியை அடுத்த திம்மராவுத்தன் குப்பத்தை சேர்ந்த சாய்பாபு என்ற பெண் கடன் பிரச்னையில் தவித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சாய்பாபு, 8 வயதான கோகுல் மற்றும் 7 வயதான கோஷன் என்ற தனது இரு மகன்களையும் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

கிணற்றில் தத்தளித்த சாய்பாபுவை உயிருடன் மீட்ட அப்பகுதி மக்கள் உயிரிழந்த சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து அந்த பெண்ணிடம் குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்