முகப்பு > தமிழகம்

நடிகர் கமலை விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ!

July 17, 2017

நடிகர் கமலை விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ!


நடிகர் கமல் நாலாந்தர பேச்சாளர் போல் பேசி வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமல் மார்க்கெட் இழந்ததால்தான் தற்போது தொலைக்காட்சிக்கு வந்துள்ளார் என குறிப்பிட்டார். 
மேலும் சிறந்த நடிகரான அவர், எதையாவது சொல்ல வேண்டும் எனக்கூறி, விளம்பரம் தேடி வருவதாக குற்றம்சாட்டினார். ஊழல் என யார் குற்றம் சாட்டினாலும் ஆதாரத்துடன் கூற வேண்டும் எனவும், நடிகர் கமலின் பேச்சு, நாலாந்தர பேச்சாளர் போன்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதிமுக பிரிந்து இருப்பதாலேயே கமல் போன்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், வறட்சி காரணமாக காய்கறிகள் விலையேற்றம் அடைந்துள்ளதாகவும், 
கடந்த சனிக்கிழமையில் இருந்து 110 ரேசன் கடைகளில் 66 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதாகவும், பண்ணை பசுமை கடைகள் தேவைப்படும் பட்சத்தில் மேலும் திறக்கப்படும் எனவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்