முகப்பு > தமிழகம்

அஜித்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு ஏன் இல்லை என அமைச்சர் கேள்வி!

July 17, 2017

அஜித்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு ஏன் இல்லை என அமைச்சர் கேள்வி!திமுக ஆட்சியில் நடிகர்களை மிரட்டி முதலமைச்சர் மாநாட்டில் பேச வைத்த போது கமல் எங்கு சென்றிருந்தார்? நடிகர் அஜித் மட்டுமே அப்போது தைரியமாக குரல் கொடுத்ததாகவும் இந்த தைரியம் கமலுக்கு இல்லாமல் போனது ஏன் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் கிரீன்வேஸ் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஜனநாயக நாட்டில் குற்றச்சாட்டு சொன்னால் அதிற்கு பதில் சொல்லக்கூடாது என்று உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைத்தால் அதற்கு முறையாக பதில் சொல்லுவோம் என்றும் தெரிவித்த அமைச்சர், கமலஹாசன் தனது முதுகில் ஆயிரத்து எட்டு அழுக்கை வைத்துக் கொண்டு தங்களைப் பற்றி பேச அருகதை இல்லை என்று கூறினார். 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்