கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை: ஸ்டாலின் | There is no need to participate in a meeting of Kamal: Stalin | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை: ஸ்டாலின்

May 17, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2155 Views

காவிரி பிரச்னைக்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம், திமுகவுக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் இல்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் ஜனநாயக படுகொலை செய்தது போல், கர்நாடகத்திலும் பிரதமர் மோடி ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியுள்ளதாக விமர்சித்தார். அனைத்து மாநில ஆளுநர்களும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள் என்றும் ஸ்டாலின் அப்போது குறிப்பிட்டார். 

காவிரி பிரச்னைக்காக கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு ஏற்படவில்லை என்றும், தோழமைக் கட்சித் தலைவர்களுடன் இதுபற்றி தொலைபேசி மூலமாகப் பேசியதாகவும் தெரிவித்தார். எனவே, தோழமைக் கட்சியினரும் கமல் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் ஸ்டாலின் அப்போது 
தெளிவுபடுத்தினார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )