இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவர்!

May 17, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1074 Views

சேலம் அருகே, குடிபோதையில், மனைவியின் தலையில் கல்லைப் போட்டு, கணவர் கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் சரவணன். கூலித் தொழிலாளியான இவருக்கு, பரமேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சரவணன் சரியாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாக கூறப்படுகிறது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், குடிபோதையில் இருந்த சரவணன், மனைவி பரமேஸ்வரி தலையில், கிரைண்டர் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில், பலத்த காயமடைந்த பரமேஸ்வரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, தப்பியோடிய சரவணனை, போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )