டபுள் ஆக்‌ஷன் இளைஞர்கள் 4 பேர் கைது! | Double action teenagers arrested | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

டபுள் ஆக்‌ஷன் இளைஞர்கள் 4 பேர் கைது!

May 17, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2337 Views

சென்னையில் பகலில் ஆட்டோ ஓட்டுனர்களாகவும் இரவில் இருசக்கர வாகனங்களை திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணாநகர் பகுதியில் இன்று காலை பாண்டியன் என்பவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயன்றனர். அப்போது பாண்டியன் கூச்சலிடவே, அங்கு திரண்ட பொதுமக்கள் அவரை மீட்டு, நான்கு பேரையும் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அண்ணா நகர் போலீசாரிடம் நான்கு பேரையும் ஒப்படைத்தனர். 

இந்நிலையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பிடிப்பட்ட தினேஷ்குமார், பிரசாந்த், கார்த்திகேயன், தினேஷ் ஆகிய நான்கு பேரும், பெரம்பூர் பகுதியில், ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தவர்கள் என்பது  தெரியவந்துள்ளது. இவர்கள் பகலில் ஆட்டோ ஓட்டுனர்களாகவும் இரவில் வாடகை காரில் பயணித்து இருசக்கர வாகன ஓட்டுநர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. 

மேலும், அம்பத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளின் தெருக்களில் நிற்கும் விலையுயர்ந்த இரு சக்கர வாகனங்கள் திருடி சென்றதையும் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரவில் வழிப்பறிக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )