இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

தொடங்கியது வண்ணத்துப்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி காலம்!

May 17, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
621 Views

மேட்டுப்பாளையத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி காலம் தொடங்கியுள்ளது. 

இயற்கையை அதன் தன்மை மாறாமல் பாதுகாப்பதில் பட்டாம்பூச்சிகளின் பங்கு இன்றியமையாதது.  இந்த சின்னஞ்சிறிய பட்டாம்பூச்சிகள் நிலத்தில் வாழும் மிகப்பெரும் உயிரினமான காட்டுயானை கூட்டங்களைப்போல ஆண்டுக்கு இருமுறை பருவ சூழலுக்கு ஏற்றார் போல் இடப்பெயர்ச்சி செய்யும் இயல்புடையது. 

கோவை மாவட்டத்தை ஓட்டியுள்ள மேற்குதொடர்ச்சி மலைக்காடுகளில் வழக்கமாக ஜூன் இரண்டாம் வாரத்தில் பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி தொடங்கும்.  ஆனால், இந்தாண்டு  மே மாத துவக்கத்தில் இருந்தே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழைக்காலம் துவங்கிவிட்டதால் வண்ணத்துப்பூச்சிகளின் உற்சாக இடப்பெயர்வும் முன்கூட்டியே துவங்கிவிட்டது. 

பலப்பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகளின் வருகை அதிகமாக காணப்படும் மிக சில இடங்களில் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் பகுதி முதன்மையானது. கல்லார் தவிர கோவையின் ஆனைக்கட்டி, சிறுவாணி மலைப்பகுதிகளிலும் இது போல பட்டாம்பூச்சிகள் ஏராளமாக வருகை தந்து பல நாட்கள் தங்கியிருக்கும் என்பதால் இவற்றை கணக்கெடுக்கும் பணியினையும் வனத்துறையினரின் உதவியோடு துவங்கியுள்ளனர் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )