​பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி போராட்டம்! | Protest seeking CBI probe into Prof. Nirmala Devi case | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி போராட்டம்!

April 17, 2018 எழுதியவர் : Jeba எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2173 Views

பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பந்தல்குடி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நிர்மலா தேவியின் பின்னணியில் உள்ள உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். மதுரை பல்கலைக்கழகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினரும், ஜாக் அமைப்பினரும் கலந்து கொண்டனர். பேராசிரியை மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் எனவும், ஆளுநரை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், பேராசிரியை நிர்மலா தேவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியை நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )