இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

பேராசிரியை நிர்மலா தேவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை

April 17, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2104 Views

கல்லூரி மாணவிகளிடம் தவறுதலாக பேசி சர்ச்சையில் சிக்கிய பேராசிரியை நிர்மலா தேவியிடம் அருப்புக்கோட்டை போலீசார் 2வது நாளாக கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர், கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு திசை திருப்ப முயற்சித்து அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதைத் தொடர்ந்து நேற்று கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று 2வது நாளாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பேராசிரியை நிர்மலாவை சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக கூறினார். 

இதனிடையே, பேராசிரியை நிர்மலா தேவியிடம் 3 செல்போன்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பறிமுதல் செய்யப்பட்ட சென்போன்களை  சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்ப இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்நிலையில் டிஜிபி 
ராஜேந்திரன் இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )