இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணையே தீர்வு: ராமதாஸ்

April 17, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1124 Views

அருப்புக்கோட்டை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணை செல்லாது என்றும், சிபிஐ விசாரணையே தீர்வு என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவது கண்டிக்கதக்கது என குறிப்பிட்டுள்ளார். பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்வதுடன், இந்த கேவலத்தின் பின்னணியில் 
உள்ளவர்கள் அனைவரையும் அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்காக வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரும், பல்கலைகழக நிர்வாகமும் விசாரணை குழு அமைத்துள்ளது மூடி மறைக்கும் முயற்சி என குற்றம் சாட்டியுள்ள ராமதாஸ் நிர்மலாதேவியுடன் யார், யாரெல்லாம் தொடர்பு கொண்டனர் என்பது குறித்த விவரங்களை உடனடியாக கண்டறிந்து, அவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் 
என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

இதே போன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நிர்மலாதேவி விவகாரம் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள வாசன், இது போன்ற சம்பவங்கள் இனி எந்த கல்லூரியிலும் நடக்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )