இன்றைய வானிலை

  • 34 °C / 93 °F

Breaking News

Jallikattu Game

மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் ஐடி ஊழியர்கள் 4 பேர் உயிரிழப்பு!

March 17, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3812 Views

மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று பழுதான நிலையில் நின்றுக்கொண்டிருந்தது. அவ்வழியாக கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மோதியது. 

இதில், ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். 

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரில் சென்ற 6 பேரும் ஐ.டி. ஊழியர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த சாலை விபத்தால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதேபோல், வேளாங்கண்ணி அருகே கார் மீது மீன் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் கேரளாவை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லை வாசலில் இருந்து நள்ளிரவில் மீன் ஏற்றிக்கொண்டு, மன்னார்குடி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது வேளாங்கண்ணி அருகேயுள்ள பரவை என்னும் இடத்தில், கேரளாவில் இருந்து சொகுசு காரில் வேளாங்கண்ணிக்கு வழிபாட்டிற்கு வந்தவர்கள் மீது, மீன் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் கேரளா மாநிலம் பாலக்காட்டு பகுதியை சேர்ந்த திலிப், அவரது தாய் கிருஷ்ணவேணி மற்றும் அவரது உறவினர் ஆர்சாமி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், உயிரிழந்த திலீப்பின் தந்தை பகவதீஸ்வரன், தங்கை தரணி ஆகிய இருவரும் படுகாயத்துடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மீன் லாரி ஓட்டுனர் ரவிசந்திரனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு நடைபெற்ற இவ்விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை எழும்பூரில் காவல் ஆய்வாளர் எனக் கூறி காதலர்களிடம்

திருப்பூரில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து ஒன்றரை

உதகை அருகே மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றதாக கணவர்

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும்போது

தற்போதைய செய்திகள் Jul 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.76 /Ltr
  • டீசல்
    ₹ 72.28 /Ltr