முகப்பு > தமிழகம்

பணத்தை ஏமாற்றிய நபரை பெண்கள் துரத்தியதால் பரபரப்பு!

July 16, 2017

பணத்தை ஏமாற்றிய நபரை பெண்கள் துரத்தியதால் பரபரப்பு!


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, பணத்தை ஏமாற்றிய நபரை பெண்கள் துரத்தியதியதால் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியவரை, தீயணைப்பு துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ராசிபுரம் அடுத்த தொட்டப்பட்டியைச் சேர்ந்த வேல்சாமி, கொல்லிமலை பயில்நாடு பகுதியில் கூலி வேலை செய்யும் பெண்களிடம், கடன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்துள்ளார். 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூல் செய்துள்ள அவர், கூறியபடி கடன் வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில், பணம் கொடுத்த 4 பெண்கள், தொட்டிப்பட்டிக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். அப்போது, வாக்குவாதம் ஏற்படவே, அங்கிருந்து தப்பிச் சென்ற வேல்சாமியை, பெண்கள் துரத்திச் சென்றுள்ளனர். விவசாய தோட்டம் வழியாக ஓடிய வேல்சாமி, அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர், விரைந்து சென்று, உயிருக்கு போராடிய வேல்சாமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நபர், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்